“புருஷன அன்னைக்கே முடிச்சிருந்தா” மிரள வைத்த அதிர்ச்சி ஆடியோக்கள் தாய் மீதே பாய்ந்த போக்சோ சட்டம்! ஆசிரியை செய்த அசிங்கம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இன்ஜினியரிங் பட்டதாரியான கணவர், 2018ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தனது உறவினர் பெண்ணை இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை (தற்போது 6 வயது) மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் விவசாய உரங்கள் மற்றும் மருந்து விற்பனை கடையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மனைவி அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். அவர்கள் தனியார் லே அவுட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், வீட்டுக்கு அருகே தங்கியிருந்த திருப்பத்தூர் அடுத்த கள்ளரூர் கிராமத்தைச் சேர்ந்த குரளரசன் (திருமணமாகாதவர்) என்பவருடன் ஆசிரியைக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் அது தகாத உறவாக மாறியது. கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் இருவரும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி நெருங்கி வந்தனர். குரளரசன் மற்றொரு பெண்ணுடனும் தகாத உறவில் இருந்ததாகவும், அவரிடம் "ஆசிரியையுடன் உள்ளது காதல் அ...