இந்த நேரத்தில் ஆணுறை அணிந்திருந்தாலும் கண்டம் தான் - இதை ஆண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்
உடலுறவின்போது கர்ப்பம் மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க ஆணுறை பயன்படுத்தும் விழிப்புணர்வு இன்று உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஆனால், இப்போது ஒரு புதிய சவால் எழுந்துள்ளது. உடலுறவு மூலம் பரவும் பல்வேறு தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவில் இல்லை. குறிப்பாக, வாய்வழி உறவு கொள்ளும்போது பெரும்பாலானோர் ஆணுறை பயன்படுத்துவதில்லை. அதிக இன்பத்தை நாடி ஆணுறையை களைந்துவிட்டு உறவில் ஈடுபடுவது பொதுவான நடைமுறையாக உள்ளது. இது பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மரகதம் பச்சையப்பன். வாய்வழி உறவு மற்றும் STI ஆபத்து எய்ட்ஸ் மட்டுமல்லாமல், கானரியா, சிபிலிஸ், ஹெர்பெஸ், ஹெபடைடிஸ் போன்ற பல்வேறு STIகள் உடலுறவு மூலம், குறிப்பாக வாய்வழி உறவு மூலம் எளிதில் பரவக்கூடும். வாயில் ஏற்படும் சிறிய காயங்கள், சொத்தைப் பற்கள், ஈறுகளில் இரத்தக் கசிவு அல்லது தொண்டைப் பகுதியில் தொற்று இருந்தால், அந்தத் தொற்று எளிதில் பங்குதாரருக்கு பரவிவிடும். ஆணுறை அணிந்து சாதாரண உடலுறவு கொண்டாலும், வாய்வழி உறவின்போது ஆணுறை பயன்படுத்தாவிட்டால் பாதுகாப்பு முழுமையடையாது என்று மருத்துவர்...