Posts

Showing posts with the label helpline

தவெக இளம் MLA ரமேஷ் கொடுத்த வாக்குறுதி தமிழகமே உற்றுநோக்கிய அதிரடி பேட்டி

Image
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் ரமேஷ், தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நேரடியாக தீர்க்க உறுதியளித்துள்ளார். கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், பட்டா பிரச்சனையால் மக்கள் அல்லல்படுவதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் அளித்த பேட்டியில், “ஸ்ரீரங்கம் தொகுதியில் அடிப்படை பிரச்சனை இல்லாதது போல் இன்னும் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பல மக்கள் பட்டா பிரச்சனையால் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் எதிர்கொண்ட விஷயங்கள்” என்று கூறினார். மேலும், “மக்கள் அரசாங்க அலுவலகங்களைத் தேடி அங்கும் இங்கும் அலைய வேண்டிய சூழலை முற்றிலுமாக குறைக்க நான் முயற்சி செய்வேன். நானே ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் பிரச்சனைகளைக் கேட்டு, அவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார். குறைதீர்ப்பு செல், இணையதளம், அலுவலகம் ரமேஷ் மேலும் கூறியத...