“பீர் பாட்டிலால் அதை பண்ணி.. நீ தான் வேணும் டா..” ஆசையாக பேசிய அழகி ஜெனிஃபர்.. இறுதியில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..
மதுரை : "நான் உன்னை விட்டு போக மாட்டேன்... விவாகரத்து வாங்கிவிட்டால் உடனே திருமணம் செய்துக்கிறோம்!" என்று ஆரம்பித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். துபாய் இளைஞரின் காதல் கனவு... திடீர் சோகம்! மதுரை மாவட்டம் கண்ணநீந்தல் பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது (30), பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்று, துபாயில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். 2019-ல் காரைக்குடி பெண்ணைத் திருமணம் செய்த ஹாரிஸ், சில நாட்களிலேயே கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். இதனால் தனிமையில் தவித்த ஹாரிஸின் வாழ்க்கை, துபாயில் தங்கியிருந்த அறையில் நட்பு கொண்ட துபரங்குறிச்சி அசார் மூலம் திடீரென மாறியது. அசார், ஹாரிஸின் விவாகரத்து பற்றிய கதையைக் கேட்டு, "மதுரை திருப்பாலை கல்லூரி தோழி ஜெனிபரை அறிமுகம் செய்துவைக்கிறேன். அவள் கணவர் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் இருக்கிறாள். விருப்பம் இருந்தால் திருமணம்!" என்று சொன்னார். 2019 அக்டோபர் மாதம், ஜெனிபரின் தாய் யாஸ்மீனிடம் அசார் ஹாரிஸை அழைத்துச் சென்றார். ஜெனிபருடன் பேசிய ஹா...