“காட்டுப்பகுதியில் 19 வயசு மனைவியுடன்.. துண்டான அந்த உறுப்பு..” விசாரணையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..
செங்கல்பட்டு, நவம்பர் 19: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த 19 வயது இளம்பெண் மதுமிதாவை, ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரது கணவர் சரண் (24) கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண். இவர் அந்தப் பகுதியில் ரவுடியாக வலம் வந்தவர் என்றும், மதுராந்தகம் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் கொலை, அடிதடி உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சரணுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 19 வயது மதுமிதாவுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரத்தி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். திருமணமான சில நாட்களிலேயே மதுமிதா ஒரு ஆண் நண்பருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண், "இனி அவனுடன் பேசக்கூடாது" எனக் கண்டித்துள்ளார். இ...