சந்திரமுகி 2 : ஜோதிகா கதாபாத்திரத்தில் இந்த நடிகையா..? - இதுக்கு படம் எடுக்காமலேயே இருக்கலாம்..! - நெட்டிசன்கள் கருத்து..!
தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "சந்திரமுகி". 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரிந்து ஒரே திரையரங்கில் 100 நாள் ஓடிய திரைப்படம் என்றால் அது சந்திரமுகியாக தான் இருக்க முடியும். இணையதளங்கள் வளர்ச்சி பெற்ற பிறகு வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகும் படங்கள் சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர்ந்து ஓடி விட்டாலே தலை தப்பிச்சது கதை தான். அதையும் மீறி, முன்னணி நடிகர்களின் படங்கள், விமர்சன ரீதியாக வரவேற்பை பெரும் படங்கள் தான் வெற்றிப்படங்களாக அமைகின்றன. சமீப காலமாக இளம் இயக்குனர்களின் படையெடுப்பு தமிழ் சினிமா மீது நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, ஷங்கர் முதல் சுந்தர் சி வரையிலான பழைய இயக்குனர்கள் கதை பற்றாகுறை காரணமாக எடுத்த படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என காலத்தை ஓட்டும் நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என கிளம்பி விட்டார் இயக்குனர் P.வாசு. இவரது மகன் ஷக்தி சினிமாவில் அறிமுகமானபோத...