ஹோம் டூர் போட்ட பிரபல யூடியூபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! சப்ஸ்கிரைபர் செய்த காரியம்!
மும்பை நகரில் பிரபல யூடியூபரான ராகுல் ஷர்மா தனது வீட்டின் ஹோம் டூர் வீடியோவை பதிவு செய்து தனது சேனலில் வெளியிட்டார். நவீன வசதிகள் நிறைந்த அவரது அழகான வீட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக காட்டிய அந்த வீடியோவில், மொட்டை மாடியில் இருந்த ஒரு கதவைப் பற்றியும் சொல்லாமல் இல்லை. “இந்தக் கதவின் தாழ்ப்பாள் கொஞ்சம் வீக்காக இருக்கிறது. சற்று வேகமாக அழுத்தினால் திறந்து விடும். பூட்டியிருந்தாலும் சில சமயங்களில் திறக்கக்கூடும். இதை சீக்கிரம் சரி செய்ய வேண்டும்,” என்று போகிற போக்கில் குறிப்பிட்டுவிட்டு வீடியோவைத் தொடர்ந்தார் ராகுல். இந்த வீடியோவை உற்று நோக்கிய அவரது ஒரு சப்ஸ்கிரைபர் வினோத் பாட்டீல், அந்தக் கதவின் பலவீனத்தை கவனித்துக்கொண்டார். உடனடியாக அவரது மனதில் ஒரு தவறான எண்ணம் உருவானது. “இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து சில பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்” என்று திட்டமிட்ட வினோத், ஒரு நாள் மாலை ராகுலின் வீட்டுக்கு அருகில் இருந்த புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் வழியாக மொட்டை மாடிக்கு தாவி வந்தார். வீடியோவில் பார்த்தது போலவே, பூட்டியிருந்த அந்தக் கதவை சற்று அழுத்தினார். கதவு உடனே தி...