Posts

Showing posts with the label newlywed violence

முதலிரவில் மனைவிக்கு தோன்றிய விபரீத ஆசை.. சுத்தியலை பயன்படுத்தி கொடூரம்.. மருத்துவமனையில் மனைவி வெளியிட்ட ரகசியம்..

Image
சென்னை, நவ. 27 : சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணமான முதல் நாளன்று தனது மனைவி வெளிப்படுத்திய விபரீத ஆசையால் விரக்தியடைந்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண தகவல் மையம் மூலம் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின் புதுப்பெண் கணவரின் வீட்டிற்கு வந்தார். முதலிரவு அன்று (24-ம் தேதி) அறைக்குள் சென்றவுடன் அகஸ்டின் ஜோஸ்வா உடனடியாக தாம்பத்திய உறவு கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால், புதுப்பெண் தன்னுடைய விபரீத ஆசையை வெளிப்படுத்தினார். அவர், "முதல்ல ஒரு ரெண்டு நாள்.. இருவரும் மனம் விட்டுப் பேசுவோம்.. அதன் பிறகு மேற்படி சமாச்சாரங்களை தொடங்கலாம்" என்று கூறினார். மனைவியின் விபரீத ஆசையை கண்டு அதி...