அந்தரங்க வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்! தீயாய் பரவும் வீடியோ!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் பணியாற்றி வந்த பெண் உதவி ஆய்வாளர் அனு ராணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி, காவல் துறையினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீரட் காவல் லைன்ஸில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் அனு ராணி, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல்களில் உடற்பயிற்சி, தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அவரது கணக்குகளில் உத்தரப்பிரதேச காவல் துறை உதவி ஆய்வாளர் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அவர் பதிவிட்ட ஒரு வீடியோவில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் QR குறியீடு தென்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) அவினாஷ் பாண்டே அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். காவல் துறையின் 2023 ஆம் ஆண்டு சமூக ஊடக கொள்கையை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொள்கையின்படி, காவல்...