தமிழக முதலமைச்சரின் தாயை இழிவாக பேசிய திமுக MP ஆ.ராசா - நடிகை ஆரத்தி வெளியிட்ட கடுமையான பதிலடி..!
திமுக எம்.பியும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து, அ.தி.மு.க சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.குப்பனுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி தனது தாயார் குறித்து பேசும் போது தழுதழுத்த குரலில் பேசினார். அவர் பேசியதாவது, “என் தாயைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். குடும்பத்தில் ஒரு தாயாக பார்க்க வேண்டும். முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தாய்மார்கள் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப் பார...