Posts

Showing posts with the label electrical shop

ரொம்ப அவசரம் வீட்டுக்கு வாங்க.. கதவை உடைத்து பார்த்த கணவன்.. ஊட்டி குளிரில் உறைய வைக்கும் சம்பவம்..

Image
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஒரு சாதாரண குடும்பத்தின் அமைதியை சிதைத்த சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த வாசுவின் மகன் 48 வயது சிவகுமார், டானிங்டன் பகுதியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வந்தார். அவருக்கு 40 வயது சுஜாதா மனைவியாகவும், ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த குடும்பம் சாதாரணமாகவே வாழ்ந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகுமாரின் நண்பரான காம்பாய்கடை பகுதியைச் சேர்ந்த அச்சுதானந்தன் (அச்சு) மற்றும் சுஜாதா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக அப்பகுதியில் பேச்சுக்கள் வலுக்கத் தொடங்கின. இந்த விஷயம் அச்சுதானந்தனின் மனைவி பரிமளாவுக்கு தெரிய வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரிமளா, சிவகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உங்கள் மனைவிக்கும் என் கணவருக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக தகவல் வருகிறது. நீங்கள் சுஜாதாவை கண்டித்து சரியான பாதையில் கொண்டு வாருங்கள். நானும் என் கணவரை கண்டித்து வருகிறேன்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது....