55 வயதில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்..! எவ்வளவு அழ முடியுமோ.. அழுது தீர்த்த ஆசிரியர்..! என்ன நடந்தது..?
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பத்தபட்டினம் அருகே உள்ள பழைய சீதி கிராமம். இங்கு வசிக்கும் 55 வயதான அல்லாகா கேதாரேஸ்வர ராவ் என்ற ஆசிரியக் கனவுகளைத் தாங்கிய மனிதரின் வாழ்க்கை, ஒரு உணர்ச்சிப் புயலாக மாறியுள்ளது. 1998-ஆம் ஆண்டு. இளைஞனாக இருந்த கேதாரேஸ்வர ராவ், ஆசிரியர் தேர்வாணையம் (DSC) நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆசிரியராகி, மாணவர்களுக்குக் கல்வி புகட்டி, நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற கனவு அவருக்கிருந்தது. ஆனால், சிலரின் முறையீடு காரணமாக வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. அந்த ஒரு வழக்கு, ஆயிரக்கணக்கான தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்க்கையை 27 ஆண்டுகளாகத் தடுத்து நிறுத்தியது. இந்தக் காத்திருப்பு கேதாரேஸ்வர ராவை முற்றிலும் உடைத்துவிட்டது. பெற்றோர் இறந்துவிட்டனர். உறவுகள் விலகினர். வசிக்கும் பாழடைந்த வீடு தவிர எதுவும் இல்லை. சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று துணிகள் விற்றார். சில நாட்கள் விற்பனை இல்லையென்றால் வெறும் வயிற்றுடன் தூங்கினார். ஏழ்மை அவரது உடலை மட்டுமல்ல, மனதையும் வாட்டியது. கிராம இளைஞர்கள் அவரை "மாஸ்டர்" என்று கேலியாக அழைத்தனர் – அது ஒரு கனவின் கேலியாக மாறியத...