உன்னை நம்புன பாவத்துக்கு.. இன்ஸ்டா இன்ஃப்ளூவன்சரால் வந்த வினை.. அடக்கொடுமைய.. உஷார் மக்களே..
கிருஷ்ணகிரி, அக்டோபர் 17: தீபாவளி பண்டிகைக்கு முன் சிவகாசி பாண்டியன் கிராக்கர்ஸ் என்ற போலி கடையின் விளம்பரத்தால் ஏமாற்றப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், அவர்களது ஃபாலோவர்கள் உட்பட பலரும் கோடிக்கணக்கான ரூபாய் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பாலாஜி, கோவிந்தராஜ் ஆகியோர் நடத்தும் 'பாலாஜி இருக்காரா' என்ற இன்ஸ்டா பக்கத்தைத் தொடங்கி, இந்த ஏமாற்றுக்குக் காரணமானதாக மாறியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளூர் மொழியில் காமெடி வீடியோக்களைப் பதிவேற்றி வரும் 'பாலாஜி இருக்காரா' இன்ஸ்டா பக்கம், 1.14 லட்சம் ஃபாலோவர்களைப் பெற்றுள்ளது. இந்தப் பக்கத்தின் உரிமையாளரான பாலாஜியை, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நபர் தொடர்பு கொண்டு, "பாண்டியன் கிராக்கர்ஸ்" பட்டாசு கடையின் தீபாவளி விளம்பரத்திற்காக ப்ரமோஷன் வீடியோ செய்யச் சொன்னார். ₹35,000-க்கு ஒப்பந்தம் ஆகி, கூகுள் பே மூலம் பணம் அனுப்பப்பட்டது. மேலும், சிவகாசி அனுப்பன்குளம் பகுதியிலிருந்து மேட்டூர் சர்வீஸ் பார்சல் மூலம் பட்டாசுகள் அனுப்பப்பட்டன.பாலாஜி, அவரது நண்பர்கள் கோவிந...