விஜய்க்கு அண்ணாமலை அதிரடி ஆதரவு! சற்றுமுன் பரபரப்பு பேச்சு!
சென்னை, ஏப்ரல் 9: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் நடத்தும் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பல இடங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் குவிவதால், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் அல்லது அசம்பாவிதம் நிகழலாம் என்ற அச்சத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில், பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதுகுறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அவர், “விஜயின் கூட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அரசியல் களத்தில் அவருக்கான இடத்தையும், அடிப்படை உரிமையையும் யாராலும் மறுக்க முடியாது” என்றார். மேலும், “இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா அல்லது பழைய திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த சந்தேகத்தை போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் க...