மாணவியை OYO ரூமுக்கு அழைத்த கொடூர பேராசிரியர்! பின்னணியில் நடந்த நடுங்க வைக்கும் தகவல்கள்!
சென்னை, மார்ச் 30, 2026 : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்ட பேராசிரியர் ஏ. ஞானவேல் பாபு (Industrial Engineering துறை) சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சம்பவம் எப்படி நடந்தது? மாணவியின் புகார் விவரங்கள் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவி, முதல் ஆண்டு முதல் ஞானவேல் பாபு வகுப்பு எடுக்கும் பாடத்தைப் படித்து வந்தார். ஆரம்பத்தில் அவர் தன்னை “அப்பா போல” பார்த்துக் கொள்வதாகக் கூறி, மாணவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு நம்பிக்கை ஏற்படுத்தினார். “கவலைப்படாதீர்கள், உங்கள் மகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி, பண உதவி (GPay மூலம்), படிப்பு ஆலோசனைகள் என மெல்ல மெல்ல அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.இரண்டாம் ஆண்டு வரை “நல்ல ஆசிரியர்” போல நடந்து கொண்ட இவர், மூன்றாம் ...