Posts

Showing posts with the label industry support

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! பகீர் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர்!

Image
சென்னை : பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் (85) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் சற்று முன் வெளியிட்ட வீடியோவில் தனது நண்பரை நினைவுகூர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பேசியுள்ளார். எஸ்.வி.சேகர் தனது வீடியோவில், “என்னுடைய அருமை நண்பர் கே.ராஜன். திரைப்பட தயாரிப்பாளர், டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் அசோசியேஷன் பிரசிடெண்ட், நடிகர் சங்க உறுப்பினர், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர். சினிமா துறையில் பல தரப்பட்ட துறைகளிலும் ஆழமான கால் பதித்தவர். எனக்கு 50 வருஷமாக பழக்கம்” என்று குறிப்பிட்டார். நாடகம் முதல் திரைப்படம் வரை... ராஜன், ஐஸ்வர்யா வேலன் நாடகங்களில் இணைந்து பணியாற்றியவர். ராஜா அண்ணாமலை மன்றத்தில் பல நாடகங்கள் நடைபெற்றபோது அவரும் பங்குதாரராக இருந்தார். 1983-ல் வெளியான பிரம்மச்சாரிகள் படம் அவரது முதல் தயாரிப்பு. அந்தப் படத்தில் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள் நடித்தனர். அதன்பின் பல படங்களைத் தயாரித்து, இயக்கவும் செய்துள்ளார். திருட்டு வீடியோவுக்கு எதிரான போராட்டம் கே.ராஜனின் மிகப் பெரிய பலம் என்னவென்றால், “மனசுல பட்ட...