19 வயது மாணவனை ஆசை காட்டி சீரழித்த 39 வயது பெண்.. சடலம் இருந்த இடம்.. மிரண்டு போன போலீஸ்.. பகீர் CCTV!
கொல்கத்தா : ஜாதக தோஷம் நீக்கும் கொடூர திட்டம்! 39 வயது ஆசிரியை 19 வயது மாணவனை ‘திருமணம்’ செய்து உயிரிழக்கச் செய்தார் – போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்கள் கொல்கத்தாவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது முழு மாநிலத்தையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. 39 வயது அழகான, நன்கு படித்த ஆசிரியை அனன்யா மித்ரா, தனது டியூஷன் மாணவர் 19 வயது ரோஹன் சட்டர்ஜியை திட்டமிட்டு உயிரிழக்கச் செய்து, உடலை காட்டுப் பகுதியில் புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலுக்குப் பின்னால் ஜாதக தோஷத்தை நீக்கும் நோக்கில் ஒரு ஜோதிடரின் ஆலோசனையும், ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தின் உதவியும் இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அனன்யா மித்ரா, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அருகிலுள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். மாலை நேரங்களில் தனது பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து கூடுதல் வருமானம் ஈட்டி வந்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய குறை இருந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வரன் தேடியும், அவருக்கு ஏற்ற திருமணம் அமையவில்லை. இளம் வயதிலேயே விதவையாகும் தோஷம் தனக்கு இருப்பத...