“குழந்தை முன்னாடி ஒட்டுத்துணி இல்லாமல்” தமிழகத்தை மிரள வைத்த கொடூரன்.. பகீர் காட்சிகள்!
தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு கொடூர ஆசிட் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான சனா பாத்திமா என்ற பெண்ணின் முகத்தில் அவரது கணவன் ஆசிட் வீசியதில் இடது கண்ணின் பார்வை முழுமையாகப் போன நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “என் கண்ணு போயிடுச்சுங்க… நான் என்ன பண்ணுவேன்னு தெரியல” என உருக்கமாகக் கூறிய அவரது பேட்டி, திருமண வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் மனரீதியான, உடல் ரீதியான வன்முறையின் கொடூரத்தை பிரதிபலிக்கிறது. சனா பாத்திமா (29) மற்றும் அவரது கணவன் இடையே 10 ஆண்டுகள் காதல், அதன்பின் 6 ஆண்டுகள் திருமண வாழ்க்கை. “இனிஷியலி எல்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா குழந்தை பிறந்த பிறகு அவரது பழக்கங்கள் மாறின” என சனா கூறுகிறார். குடி, தம்பாக்கு, போதைப் பொருள் உபயோகம், இரவு 2 மணி-3 மணிக்கு வீட்டுக்கு வரும் பழக்கம், குழந்தையைப் பார்க்காதது, வேலை செய்ய மறுப்பது என படிப்படியாக வாழ்க்கை நரகமானது. “டெய்லி சண்டை, துணி இல்லாமல் வந்து படுப்பது, தூங்கும் போது கழுத்தில் கத்தி வைத்து பார்ப்பது, குழந்தையை அடிப்பது, என் பணத்தைத் திருடுவது, ஜுவலரி எடுப்பது வரைக்கும் போ...