காருக்குள் உல்லாசம்.. இயற்கை உபாதை கழிக்க வந்த பெண்களிடம் கொடூரம்.. CCTV வீடியோவால் அதிர்ச்சி..
லக்னோ, டிசம்பர் 12, 2025 : உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பயணிக்கும் இளம் ஜோடிகளுக்கு கொடூர அதிர்ச்சி! சாலை ஓரத்தில் காருக்குள் நெருக்கமாக இருக்கும் தருணங்களை CCTV கேமராவில் பதிவு செய்து, அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த ஊழலின் பின்னணியில் சுங்கச்சாவடி மேலாளர் அசுதோஷ் விஸ்வாஸ் என்ற கொடூரன் இருப்பது தெரிய வந்துள்ளது. இது ஒன்று போதாதென்று, அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மற்றும் போலீசாரையும் இவர் மிரட்டி வசூலித்திருப்பது விசாரணையில் திடுக்கிடும் உண்மையாக வெளியாகியுள்ளது! 341 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த விரைவுச்சாலை, லக்னோவிலிருந்து காசிபூர் வரை செல்கிறது. ஒவ்வொரு 2 கிலோமீட்டருக்கும் உயர் தெளிவு திறன் கொண்ட சுழலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாலியாப்பூரில் உள்ள சுங்கச்சாவடி கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், இந்த பாதுகாப்பு அமைப்பையே தனது கொள்ளைக்கு கருவியாக்கியுள்ளார் அசுதோஷ் விஸ்வாஸ்! சாலையில் பயணிக்கும் இளம் ஜோடிகள், தங்கள் கார்களை ஓரமாக நிறுத்தி தனிமையில...