Posts

Showing posts with the label police quarters attack

திருச்சியில் குலைநடுங்க வைக்கும் படுகொலை.. கும்பலாக காவலரின் வீட்டுக்குள் புகுந்து வெட்டு.. அதிர வைக்கும் பகீர் காரணம்

Image
திருச்சி, நவம்பர் 10: திருச்சி பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் தாமரைச் செல்வன் (25), காவலர் குடியிருப்பில் உள்ள துணை கண்காணிப்பர் (எஸ்எஸ்ஐ) வீட்டிற்குள் பதுங்கியபோதும் துரத்தி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமிஷன் தொடர்பான மோதலில் இந்தக் கொலை நடந்ததாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை கும்பலில் ஐந்து பேர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாமரைச் செல்வன், திருச்சி கடல் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாருனின் மகன். அவர் உள்ளூர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஏஜெண்டாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன், எத்தனை கோரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் தாமரைச் செல்வனுக்கும் ரியல் எஸ்டேட் கமிஷன் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. இதில் தாமரைச் செல்வன் சதீஷை அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவமானம் அடைந்த சதீஷ், தனது நண்பரான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிரபாகரனிடம் இதுகுறித்துப் புகார் செய்தார். பிரபாகரன், தனது நண்பர்களான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கணேசன், நந்து, இளமாறன் ஆகிய...

CM மீட்டிங்.. அருகில் காவலர் குடியிருப்பில் கொஞ்சமும் பயமின்றி வெ*டி கொ**ப்பட்ட இளைஞர்.. உண்மையில், நடந்து இது தான்..!

Image
திருச்சி, நவம்பர் 10: திருச்சி பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியில், காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் ஒருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இருக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம், போலீஸ் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயது தாமரைச்செல்வன் என்ற இளைஞர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இன்று மாலை, அவர் இரு சக்கர வாகனத்தில் பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் கும்பல் அவரை வழிமறித்தது. செய்வதறியாத தாமரைச்செல்வன் வாகனத்தை நிறுத்தியதும், அந்த கும்பல் அவரது வண்டியை மோதி தள்ளி, அவரை நிலைகுலைய வைத்து கத்தி, கம்மி எனும் கட்டையால் கொடூரமாகத் தாக்கினர். எப்படியோ தப்பித்த தாமரைச்செல்வன், அருகில் உள்ள புதிய மாசிங் பேட்டை காவல் குடியிருப்புக்குள் பரபரப்பாகப் புகுந்தார். ஆனால், காவலர் குடியிருப்பு என்பதைப் பொருட்படுத்தாமல், அந்த...