என் புருஷன் அதுல வேஸ்ட்.. திருப்தி அடையாத இளம் மனைவி செய்த கொடூரம்.. நான்கு மாதங்கள் கழித்து சிக்கிய பின்னணி!
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் பிரதீப் சாஹூ மற்றும் சுனிதா சாஹூ. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு வாரிசுகள். பிரதீப் தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வந்தார். வீட்டிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த நிறுவனத்திற்கு தினமும் சென்று மாலை வேலை முடிந்ததும் வீடு திரும்புவதே வழக்கம். பயண நேரம் மட்டும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும். இரவு 8 மணிக்கு வேலை முடிந்தாலும் வீடு சேர 10 மணி ஆகிவிடும். இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. ஒருநாள் காலை சுனிதா உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதறினார். “கணவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது எழுந்திருக்கவே இல்லை. எவ்வளவு எழுப்பியும் பதில் இல்லை” என்றார். விரைந்து வந்த உறவினர்கள், அருகிலிருந்த நெருக்கமான மருத்துவரை அழைத்து உயிரிழப்பை உறுதி செய்தனர். அன்றே இறுதிச் சடங்குகள் முடிந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. அன்று புதைக்கப்பட்டது பிரதீப்பின் உடல் மட்டுமல்ல, அவரது மறைவுக்கான உண்மையான காரணமும்தான் என்று பின்னர் தெரியவந...