அழகான சிரிப்புக்கு பின்னே.. நாட்டையே நடுங்க வைத்த சம்பவம்... யார் இந்த இஷாரா செவ்வந்தி..?
கொழும்பு, அக்டோபர் 17: சமூக வலைதளங்களில் "கையில் விலங்கு, முகத்தில் அழகான புன்னகை" என்று வைரலாகி, சினிமா நடிகை போல தோன்றிய இளம் பெண்ணின் புகைப்படம் பலரை ஈர்த்தது. ஆனால், அந்தப் பெண் இலங்கையின் நிழல் உலகத்தில் பெரும் புயலை ஏற்படுத்திய குற்றவாளி – 25 வயதான இஷாரா செவ்வந்தி! கடந்த பிப்ரவரி 20 அன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த படுகொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இவர், எட்டு மாதங்களுக்குப் பின் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இலங்கை போலீஸை சவாலுக்கு உள்ளாக்கியது. என்ன நடந்தது? விரிவாகப் பார்ப்போம். பழிவாங்கல் திட்டத்தின் தொடக்கம் இலங்கையின் நிழல் உலகத்தில் பெயர் பெற்ற தாதா கனேமுல்ல சஞ்சீவ், மற்றொரு தாதா கெகல்பத்ர பத்மேவின் தந்தையை கொன்ற வழக்கில் விசாரணைக்காக பிப்ரவரி 20 அன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு போலீஸ் காவலில் அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த கெகல்பத்ர பத்மே, துபாயில் இருந்தே பழிவாங்கல் திட்டத்தை வகுத்தார். அவர் தனது கும்பலினர் சமைந்து தில்ஷன், இஷாரா செவ்வந்தி உட்பட சிலரை கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இவர்களின் இலக...