நாட்டையே உலுக்கிய சம்பவம் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை! வீடு திரும்பிய பெண்ணிற்கு சோகம்!
டெல்லி : 2012-ம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதே டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 30 வயது திருமணமான பெண் ஒருவர் இரு பேருந்து ஊழியர்களால் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ன? டெல்லியின் பிதம்புறா பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த மே 11-ம் தேதி இரவு, வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், சரஸ்வதி விகார் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, ராயல் டிராவல்ஸ் எனும் ஆரஞ்சு நிற ஸ்லீப்பர் பேருந்து அங்கு நின்றது. பேருந்தின் கதவருகே இருந்த நபரிடம் நேரம் கேட்கச் சென்ற அந்தப் பெண்ணை, அந்த நபர் வலுக்கட்டாயமாக பேருந்துக்குள் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. உடனே பேருந்தின் மற்றொரு நபர் அதை நங்குலோய் பகுதியை நோக்கி ஓட்டிச் சென்றார். ஓடும் பேருந்துக்குள் இரு நபர்களும் மாறி மாறி அந்தப் பெ...