நல்ல அறிவிப்பை சொல்கிறேன் என்று சொன்ன விஷ்ணு வரதன்..! - அடுத்து இயக்கவுள்ள படம்..?
அஜித் நடித்த 'பில்லா, ஆரம்பம்' படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அடுத்து ஹிந்தியில் 'ஷெர்ஷா' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை கரண் ஜோஹர் உள்ளிட்ட சிலர் இணைந்து தயாரிக்கிறார்கள். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த 24 வயதான கேப்டன் விக்ரம் பாத்ரா பற்றிய பயோபிக் படம் இது. விக்ரம் பாத்ரா கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கிறார். தமிழில் 7 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கிய விஷ்ணுவர்தன் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் தற்போது 'ஷெர்ஷா' படம் மூலம் ஹிந்தியில் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது.