Posts

Showing posts with the label Jegan

வலிக்குது விடுங்கடா.. ஒரே நேரத்தில் 20 பேர்.. துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்.. பகீர் காட்சிகள்..

Image
கன்னியாகுமரி: தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமிதோப்பு, செட்டிவிளை பகுதியில் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த இளம்பெண்ணை, கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. பெண்ணின் கணவர் ஜெகன் மற்றும் அவரது தாய் விஜயா ஆகியோர் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாமிதோப்பு, செட்டிவிளை பகுதியைச் சேர்ந்த விஜயா (52) மற்றும் அவரது மகன் ஜெகன் (35) ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெகன், முகிலன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (20) என்ற பெண்ணை கடந்த 22 செப்டம்பர் 2025 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமண வயதையும் கடந்தவர்கள். இருப்பினும் பெண் வீட்டாருக்கு இந்த திருமணம் விருப்பமில்லாததால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக ஜெகன் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புக...