"அப்போ இவ்ளோ நாள் நம்புனது உண்மை இல்லையா?" சர்க்கரை நோய் டெஸ்டில் பேரதிச்சி முடிவு
சர்க்கரை நோய் (டயாபிடீஸ்) கண்டறிவதற்கும், கட்டுப்பாட்டை கண்காணிப்பதற்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் HbA1c (ஹீமோகுளோபின் A1c) இரத்தப் பரிசோதனை, இந்தியாவில் பலருக்கு தவறான அல்லது துல்லியமற்ற முடிவுகளைத் தரலாம் என்று The Lancet Regional Health – Southeast Asia இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வு எச்சரிக்கிறது (பிப்ரவரி 2026). இந்த ஆய்வு, பேராசிரியர் அனூப் மிஸ்ரா தலைமையில் நடத்தப்பட்டது. இதன்படி, இந்தியாவில் இரத்த சோகை (அனீமியா), ஹீமோகுளோபின் கோளாறுகள் (ஹீமோகுளோபினோபதிகள் – உதாரணம்: தலசீமியா, சிக்கிள் செல்), மற்றும் G6PD குறைபாடு போன்றவை மிகவும் பொதுவானவை. இவை இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம், அளவு அல்லது அமைப்பை பாதிக்கின்றன. இதனால் HbA1c மதிப்பு உண்மையான இரத்த சர்க்கரை அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காட்டலாம். ஏன் இது தவறாகக் காட்டலாம்? இரத்த சோகை (குறிப்பாக இரும்புச் சத்து குறைபாடு): HbA1c-ஐ அதிகமாக காட்டும் (உண்மையில் சர்க்கரை குறைவாக இருந்தாலும் நீரிழிவு இருப்பது போல தோன்றும்). சில ஹீமோகுளோபின் வகைகள் அல்லது G6PD குறைபாடு: HbA1c-ஐ குறைவாக காட்டலாம் (நீரிழிவு இருந்தாலும் இல்லாதது போ...