Posts

Showing posts with the label IAS officer

வலி நிறைந்த வாழ்க்கை.. பீலா வெங்கடேசன் உயிரிழந்த உண்மை காரணம் என்ன? 56 வயதில் திடீர் மரணம்!

Image
சென்னை, செப்டம்பர் 25 : தமிழக சுகாதாரத் துறை முன்னாள் செயலாளர் பீலா வெங்கடேசன் (56) கடந்த புதன்கிழமை மாலை மூளை புற்றுநோயால் உயிரிழந்தார். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது தினமும் மாலை வேளையில் தொலைக்காட்சிகளில் தோன்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவரது பங்களிப்பு, தமிழக மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். தனது 56வது வயதில் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட மனமுறிவுகளையும், குணமடையாத நோயின் வலியையும் சகித்துக்கொண்டு, அமைதியாக வாழ்ந்து மறைந்த பீலா வெங்கடேசனின் உடல், கொட்டிவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், அதிகாரிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேதருகே வாழையடி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பீலா வெங்கடேசன், மறைந்த தமிழக டி.ஜி.பி. எல்.என். வெங்கடேசன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் தம்பதியரின் மகளாக செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தார். மருத்துவப் படிப்பை முடித்து, 1997ஆம் ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். ஐ.பி.எஸ். அதிகாரி...

தமிழக அரசு முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மரணம்! உண்மையான காரணம் என்ன தெரியுமா..?

Image
சென்னை, செப்டம்பர் 24: தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (56), உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை ஆயிரம் விளக்கு உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அரசு மற்றும் நிர்வாக வட்டாரத்தில் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.1997ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பீலா வெங்கடேசன், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பான பணியை அளித்து வந்தார். குறிப்பாக, கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக பொறுப்பேற்று, மாநிலத்தில் தடுப்பூசி இயக்கம் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார். அவரது திறமையான நிர்வாகம், பல்வேறு சவால்களை சமாளிக்க உதவியது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தின் வாழையடி ஊரைச் சேர்ந்த பீலா வெங்கடேசன், காவல்துறை முன்னாள் டி.ஜி.பி. எல்.என். வெங்கடேசனின் மகளும், சாத்தான்குளம் தொகுதி முன்னாள் எ.மி.எல்....

அஜித்குமார் மரணத்திற்கு காரணம் இது தான்! தன் வாயாலேயே உளறிய நிகிதா! பகீர் வீடியோ!

Image
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் (27) மரண வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜூன் 28, 2025 அன்று, மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமி அளித்த 10 பவுன் நகை திருட்டு புகாரின் அடிப்படையில், அஜித்குமார் திருப்புவனம் காவல் நிலையத்தின் தனிப்படையால் கைது செய்யப்பட்டார்.  விசாரணையின்போது, அவர் கோயிலின் பின்புற மாட்டுத் தொழுவத்தில் கம்பு, பிளாஸ்டிக் குழாய் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு, வாயிலும் பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடி தடவப்பட்டு உயிரிழந்தார்.  இந்த சம்பவம் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் தீரன், மதுரை உயர் நீதிமன்றத்தில் அஜித்குமாரின் தரப்பில் வாதாடுகையில், நகை திருட்டு புகார் முற்றிலும் போலியானது என்று குற்றம்சாட்டியுள்ளார்.  அவரது வாதத்தின்படி, அன்றைய தினம் கோயிலில் நிகிதாவின் மாற்றுத்திறனாளி தாயாரை வீல்சேரில் அமரவைத்து, கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பா...

ஓஹோ.. மூஞ்சிய மறைச்சிகிட்டு பேசுனதுக்கு இது தான் காரணமா..? வசமாக சிக்கிய நிகிதா!

Image
சிவகங்கை மாவட்டம், மட்டப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் பாதுகாவலராக பணியாற்றிய 27 வயது இளைஞர் அஜித்குமார், காரில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகையை திருடியதாக மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி அளித்த புகாரின் அடிப்படையில், திருப்புவனம் காவல் நிலையத்தின் தனிப்படையால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் 28, 2025 அன்று, விசாரணையின் போது அஜித்குமார் கம்பு மற்றும் பிளாஸ்டிக் குழாய்களால் கடுமையாக தாக்கப்பட்டு, அவரது வாயிலும் பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடி தடவப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், புகார் அளித்த மருத்துவர் நிகிதா மீது 2011-ல் மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.  2011-ல், நிகிதா, அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உதவியாளரை (PA) தனக்கு நன்கு தெரிந்தவர் எனக் கூறி, ஆசிரியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணிகளை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ராஜாங்கம் என்பவரிடம் பல தவணைகளில் 16 லட்சம் ரூபாய் வசூலித்தார...