Posts

Showing posts with the label Neeya Naana

எஸ்ட்ஸ்? திருநங்கை? கணவர் பிரிவு! கும்மி ஆடி பிரபலமான பெண்ணின் கண்ணீர் பேச்சு!

Image
சமூக வலைதளங்களில் பிரபலமாகி, ட்ரோலிங்கிற்கு ஆளானவர்களை வைத்து சமீபத்தில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் நடந்த விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதில், கும்மி டான்சர் சங்கீதா, தன்னை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வதால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து உருக்கமாகப் பேசினார்.  ஒரு நிமிட ரீல்ஸ் வீடியோவை வைத்து ஒரு பெண்ணை தவறாக மதிப்பிடுவது, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் கடுமையாக விமர்சிப்பது எவ்வாறு நியாயமாகும் என்று அவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  சங்கீதாவின் கூற்றுப்படி, சமூக வலைதளங்களில் பெண்கள் எதையாவது பதிவிட்டால், உடனே அவர்களை ட்ரெண்ட் செய்து, ஆணாதிக்க மனோபாவத்துடன் மோசமான கருத்துகளை பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. ஆண்கள் இதேபோல் பதிவிட்டால், அவர்கள் ட்ரோல் செய்யப்படுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.  “ஒரு பெண் எப்படி இவ்வளவு பிரபலமாக முடியும் என்ற பொறாமையே இதற்கு காரணம்,” என்று கூறிய அவர், “உனக்கு எய்ட்ஸ் இருக்கு, திருநங்கை மாதிரி இருக்கிறாய்” போன்ற கேவலமான கருத்துகளால் தனது மனம் புண்பட்டதாக வேதனை தெரிவித்தார்.  சங்கீதாவின் கும்மி நடனம், அவர...