காதலியின் 42 வயது தாய்க்கு காதலன் செய்த கொடூரம்! 19 வயது மகள் செய்த கேடு கெட்ட செயல்! அட கன்றாவிய!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த பிள்ளையார்புரம், அன்னம் வலை கம்பெனி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். அவரது மனைவி கலாவதி (42). இவர் அதே பகுதியில் சிறிய அளவில் முறுக்கு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இளைய மகள் சுருதி (19) நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயில்கிறார். சுருதிக்கு அதே கல்லூரியில் படிக்கும் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (19) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இது பின்னர் காதலாக மாறியது. அபிலாஷ் ஒரு கட்டத்தில் அவசரமாக பணம் தேவை என்று சுருதியிடம் கேட்டுள்ளார். இதனால் சுருதி, தனது திருமணத்திற்காக தாயார் கலாவதி சேர்த்து வைத்திருந்த 10 பவுன் நகைகளை யாருக்கும் தெரியாமல் அபிலாஷிடம் கொடுத்துவிட்டார். பின்னர் நகைகள் காணாமல் போனதை அறிந்த கலாவதி அதிர்ச்சியடைந்தார். வீட்டில் உள்ள இரு மகள்களிடமும் விசாரித்தபோது, சுருதி தனது காதலனுக்கு பணம் தேவைப்பட்டதால் நகையை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த தாய் கலாவதி,...