Posts

Showing posts with the label Food delivery scam

உணவு டெலிவரி நிறுவனத்தை ஏமாற்றி 2 ஆண்டுகளாக "ஓசி சோறு" சாப்பிட்ட டுபாக்கூர்! சிக்கியது எப்படி..?

Image
நகோயா, ஜப்பான்: அக்டோபர் 23, 2025 வேலையில்லா இளைஞர் ஒருவர், ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு 'உணவு வரவில்லை' என்று பொய் சொல்லி பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவச உணவுகளை அனுபவித்த சம்பவம் அம்பலமானது. நகோயா நகரைச் சேர்ந்த 38 வயது டக்குயா ஹிகாஷி மோடா என்ற இளைஞர், இந்த மோசடியில் 1,095 முறை ஈடுபட்டு 3.7 மில்லியன் யென் (தோராயமாக 21 லட்சம் இந்திய ரூபாய்) திருடியதாக போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பக்கத்து வீடுகளின் உணவு டெலிவரி: ஏக்கத்திலிருந்து மோசடி யோசனைக்கு மாற்றம் டக்குயா ஹிகாஷி மோடா, வேலையில்லாத நிலையால் அன்றாட உணவுக்காக தவித்து வந்தார். அவரது பக்கத்து வீடுகளுக்கு தினசரி உணவு டெலிவரி நிகழும் காட்சியை ஏக்கத்துடன் பார்த்தபோது, அவருக்கு ஒரு 'நூதனமான' யோசனை தோன்றியது.  ஜப்பானின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான 'டெமேகேன்' (demae-can) ஆப்பை தனது சம்பவம் செய்த டக்குயா, இதன் மூலம் தனக்குப் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்யத் தொடங்கினார்.அவரது மோசடி முறை இவ்வாறு: ஆப்பில் உணவை ஆர்டர் செய்...