நோயாளியை திருமணம் செய்த மனநல மருத்துவர்.. முதலிரவுக்கு பின் காத்திருந்த பேரதிர்ச்சி..
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சனத்நகர் செக் காலனியில், 33 வயதான மனநல மருத்துவர் டாக்டர் ஏ. ரஜிதா, தனது கணவர் ரோகித் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொடர் துன்புறுத்தலால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜிதா, பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மனநல மருத்துவமனையில் பயிற்சி மாணவியாக இருந்தபோது, மனநல சிகிச்சை பெற்று வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரோகித்தை சந்தித்தார். அவரது சிகிச்சையால் ரோகித்தின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், முதலிரவுக்கு பின் கணவர் ரோஹித்தின் நடவடிக்கைகளில் மாற்றத்தை பார்த்தார் ரஜிதா. ஒரு கட்டத்தில், ரோகித் தனது வேலையை விட்டு, ரஜிதாவின் வருமானத்தை ஆடம்பர செலவுகளுக்கு பயன்படுத்தினார். புகழ்பெற்ற பன்னாட்டு பள்ளியில் குழந்தைகள் மனநல மருத்துவராக பணியாற்றிய ரஜிதாவிடம், பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை செய்ததோடு, மறுத்தால் உடல் ரீதியாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோகித்தின் பெற்றோர் கிஷ்டையா, சுரேகா மற்றும் சகோதரர் மோகித் ஆகியோரும் ரஜிதாவை துன்பு...