Posts

Showing posts with the label lubrication

ஆணுறையை ஒருமுறை இப்படி பயன்படுத்தி பாருங்கள்! மருத்துவர் செயல்முறை விளக்கம் வீடியோ!

Image
சென்னை : பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான உறவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒரு பிரபல கன்டென்ட் கிரியேட்டர் நிவேதா மனோகரன் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் கவனம் பெற்றுள்ளது. காண்டம் பயன்படுத்துவது எவ்வளவு எளிதானது என்பதை விளக்கிய அவர், பெண்களும் கண்டிப்பாக காண்டம் எடுத்துச் செல்லலாம் மற்றும் பயன்படுத்த வலியுறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். காண்டம் என்பது பாலியல் நோய்த்தொற்றுகள் (STIs) மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுக்கும் சிறந்த முறையாகும். “நாம் இருவரும் வசதியாக இல்லை என்றால், காண்டம் பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும்” என அவர் கூறினார். காண்டம் பயன்படுத்தும் முறை: பல்வேறு அளவுகளில் (எக்ஸ்ட்ரா ஸ்மால் முதல் எக்ஸ்ட்ரா லார்ஜ் வரை) காண்டங்கள் கிடைக்கின்றன. எனவே “பொருந்தாது” என்ற கவலை தேவையில்லை. காண்டத்தின் முனைப்பகுதியை சரியாகப் பிடித்து, உயர்த்தப்பட்ட நிலையில் ரோல் செய்து அணிய வேண்டும். முழுமையாக மூடும் வகையில் அணிந்து கொள்ள வேண்டும். உராய்வைக் குறைக்கவும், வசதியை அதிகரிக்கவும் லூப்ரிகண்ட் (லூப்ரிகேஷன்) பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. ...