ஒரே அறிவிப்பில் Game Changed! விஜய்யின் அதிரடி அறிவிப்பு! அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
நேயர்களே, தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜய் விரைவில் மூன்று எலக்ஷன் வாய்ஸ் (Election Voice) வீடியோக்களை வெளியிட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அரசியல் தலைவராக முதன்முறையாக அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எலக்ஷன் வாய்ஸ் - மூன்று வீடியோக்கள் விஜய் தன்னுடைய "பிக் வாய்ஸ்" அல்லது "எலக்ஷன் வாய்ஸ்" என்ற பெயரில் மூன்று முறை தனிப்பட்ட வீடியோ செய்திகளை வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் தேர்தல் தொடர்பான முக்கிய கருத்துகள், கொள்கைகள் அல்லது சமகால பிரச்சினைகள் குறித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என TVK தளபதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு முன் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோவே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இம்முறை தேர்தல் சூழலை மாற்றும் வகையில் மூன்று வீடியோக்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பு - ...