“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..
ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே உள்ள ஒரு அமைதியான கிராமத்தில் வசித்து வந்தார் தீபா. 42 வயதான தீபா, 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவருடன் ஏற்பட்ட பிணக்கால் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அழகும் அமைதியும் கொண்ட தீபாவுக்கு, திருமணத்துக்குப் பின் எந்த உறவும் இல்லை என அக்கம் பக்கத்தினர் நினைத்திருந்தனர். ** இது உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் வலியை மதித்து பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தீபாவின் வீட்டுக்கு அருகில் வசித்தவர் அர்ஜுன். 20 வயது இளைஞர், அருகிலுள்ள கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்தார். அர்ஜுனின் பெற்றோர்கள் – ரமேஷும் சீதாவும் – நல்ல குடும்பத்தினர். இரு குடும்பங்களும் நெருக்கமாகப் பழகி வந்தனர். தீபாவின் வேலை இடம் அர்ஜுனின் கல்லூரியைத் தாண்டி இருந்ததால், காலையில் ஸ்கூட்டரில் செல்லும் போது அர்ஜுனை ஏற்றிச் செல்வது வாடிக்கையானது. அர்ஜுனின் பெற்றோர்களும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. துவக்கத்தில் அது வெறும் உதவியாக இருந...