2025 முதல் ஆறு மாதத்தில் அடி வாங்கிய டாப் நடிகர்..மக்களை கவர்ந்த 5 படங்கள்!
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்பது பல ஆண்டுகளாக படங்களின் தரத்தையும், ரசிகர்களின் வரவேற்பையும் அளவிடும் முக்கிய அளவுகோலாக இருந்து வருகிறது. ஆனால், பல நூறு கோடி செலவில் எடுக்கப்படும் படங்கள் இரண்டாம் நாளிலேயே திரையரங்குகளில் ரசிகர்கள் இல்லாமல் காட்சிகள் ரத்து செய்யப்படுவது ஒரு புறம் இருக்க, குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றி பெறுவது திரையுலகில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளியாகி, விமர்சன மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ஐந்து தமிழ் படங்களை இந்தத் தொகுப்பு எடுத்துரைக்கிறது. 05.மத கஜ ராஜா : சுந்தர் சி இயக்கத்தில், விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த இப்படம், 2012-இல் வெளியாக திட்டமிடப்பட்டு, தாமதமாக 2025 பொங்கல் அன்று வெளியானது. காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 04.குடும்பஸ்தன்: நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளீஸ்வர் இயக்கத்தில் மணிகண்டன் நட...