Posts

Showing posts with the label chain collision

லாரி ஓனர் செய்தது சரியா..? தொப்பூர் விபத்தில் பலியான 4 உயிர்கள்..! காரணம் தெரிந்து ஆடிப்போன மக்கள்.!

Image
தர்மபுரி, டிசம்பர் 16 (செவ்வாய்க்கிழமை) : வாகன ஓட்டிகளால் "மரணச்சாலை" என்று அச்சத்துடன் அழைக்கப்படும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதிக சுமை ஏற்றப்பட்ட லாரியின் பிரேக் பழுது மற்றும் உரிமையாளரின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்த இந்த சங்கிலித் தொடர் விபத்து, அப்பகுதி வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரூரைச் சேர்ந்த விஜய்க்கு சொந்தமான லாரி, மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் இருந்து கோழித் தீவன மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தது. கர்நாடக எல்லையைக் கடந்து தமிழகத்தில் நுழைந்து, ஆபத்தான தொப்பூர் கணவாய் இறங்குமுகச் சாலையில் சென்றபோது லாரியின் பிரேக் பிடிக்காமல் போனது. ஓட்டுநர் முனியப்பன் (45, நாமக்கல் மாவட்டம் நடுக்கரப்பட்டி) லாரியைக் கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியடைந்தார். மாற்று ஓட்டுநர் வீரா (ஈரோடு) ஓடும் லாரியில் இருந்து தாவிக் குதித்து உயிர் தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில் முன்னால் சென்ற ஈஷர் கண்டெய்னர் சரக்கு வாகனத்தின் மீது மோதியது. அதைத் தவிர...