Posts

Showing posts with the label excavations

நாய் போல புதைக்கப்பட்ட உடல்.. இளம்பெண்ணின் சடலத்தால் தர்மஸ்தலா புதைகுழியில் புதிய அதிர்ச்சி..

Image
கர்நாடகாவின் தர்மஸ்தலா, ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவிலைச் சுற்றிய புனித பூமியாக விளங்கி வந்த இடம், தற்போது மர்ம மரணங்களால் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த பகுதி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. மர்மமான மரணங்கள், தோண்டப்படும் குழிகள், மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஏக்கம் ஆகியவை இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன. தோண்டப்படும் குழிகள் மற்றும் கிடைத்த ஆதாரங்கள் கடந்த ஐந்து நாட்களாக தர்மஸ்தலாவில் 10 இடங்களில் குழிகள் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், ஆறாவது இடத்தில் மட்டுமே எலும்பு கூடு கிடைத்துள்ளது. முதல் இடத்தில் தோண்டப்பட்டபோது ஒரு பான் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டு கிடைத்தன. இவை மார்ச் 2025-ல் மஞ்சள் காமாலையால் உயிரிழந்த ஒரு ஆணின் பான் கார்டு மற்றும் அவரது தாயாரின் ஏடிஎம் கார்டு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை வழக்குடன் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. மழையால் தோண்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும், இந்த பணி நாளையும் தொடர உள்ளது. புதிய புகார் மற்றும் மர்ம மரணங்களின் பின்னணி சமூக ஆர்வலர் ஜெயந்த் என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு பதின்ம வயது பெண்...