“கரும்பு காட்டில் உல்லாசம்..” உடலுறவின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை.. துடிதுடித்து பிரிந்த உயிர்!
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், அதானி கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான சுஜாதா என்ற பெண்ணை அவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த குமார் கல்லப்பா (36) கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஜாதாவுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இருந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். அதானி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த அவர், அதே பகுதியைச் சேர்ந்த குமார் கல்லப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். சுஜாதா சிறிய அளவில் வேலை செய்து சொத்து சேர்த்து வைத்திருந்தார். அவர் குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து கேட்டு வந்தார். ஆனால், குமார் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் சுஜாதா அடிக்கடி குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "என் சொத்துக்காகத்தான் என்னிடம் பழகுறியா?" என்று கேட்டு, திருமணம் செய்து...