வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விஜய்..? தவெக அலுவலகத்தில் பரபரப்பு.. தலை கீழாக மாறும் TVK பிம்பம்..!
சென்னை, செப்டம்பர் 28, 2025 : தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சார சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த துயர நிகழ்வுக்குப் பிறகு விஜய் தனது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் மீண்டும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தல் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நேற்று (செப்டம்பர் 27) வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற TVK பிரச்சார கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தபோது, திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர், 83 பேர் காயமடைந்தனர். இந்த எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சம்பவத்தின் போது விஜய் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்ததாக பயனர் கூறுகின்றனர், இது சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங...