Posts

Showing posts with the label Charles Martin

தமிழகத்தை வளைக்கும் கும்பல்! பாயும் மார்ட்டின் குடும்பத்தின் பணம்! ஆதவ் கண்ணசைவில் இயங்கும் அமைச்சர்கள்!

Image
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் நடந்த காட்சி பலரையும் வியக்க வைத்தது. ஆதீனங்கள் பின்னால் அமர்ந்திருக்க, கோவில் அரங்காவளர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் நின்றுகொண்டிருக்க, முன்வரிசையில் கோவையைச் சேர்ந்த லாட்டரி மார்டினின் மகனும் புதுச்சேரி எம்.எல்.ஏ.வுமான சார்ல்ஸ் மார்டின் தன் மனைவியுடன் அமர்ந்திருந்தார். அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் நிர்மல்குமார் வரை அவருக்கு விழுந்து விழுந்து உபசரித்தனர். இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. சமூக நீதி நலத்துறை அமைச்சர் வன்னியரசுவின் மனைவி ஆதிரையின் அக்கா மகன் சஜித்குமார் திருமணம் பல்லாவரத்தில் நடைபெற்றபோது, திருமாவளவன் தமிழக அமைச்சர்களுக்கு பேனர்கள் வைத்திருந்த அதே இடத்தில், ஆதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மற்றும் அவரது மகன் சார்ல்ஸ் மார்டினுக்கும் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் புகழ்பெற்ற கிறிஸ்தவ கல்லூரி திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் பிரபல பல்கலைக்கழக வேந்தர் வி.ஐ.டி. விஸ்வநாதன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் ஓரமாக நின்றிருக்க, லீமா ரோஸ் முக்கியத்துவம் பெற்றார். இப்படி அனைத்து இடங்களி...