ஃபாரினில் கணவர்.. தீராத உடலுறவு மோகம்.. வாய்க்குள் வெடித்த அந்த குச்சி.. கள்ளக் காதலன் பகீர் வாக்குமூலம்..
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷின் மனைவி தர்ஷிதா (22) கர்நாடகாவின் சாலிகிராமத்தில் உள்ள லாட்ஜ் அறையில் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தர்ஷிதா, கணவர் வீட்டில் இருந்து 30 சவரன் நகையும், 4 லட்சம் ரூபாயும் திருடி, தனது கள்ளக்காதலனான சித்தராஜுவுடன் இணைந்து வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தத் திட்டம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் மாவட்டம், இரிக்கூரில் உள்ள சுபாஷின் வீட்டில் நகையும் பணமும் மாயமானது தொடர்பாக இரிட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, சுபாஷின் குடும்பத்தினர் மீது சந்தேகம் திரும்பியது. மேலும், தர்ஷிதாவின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ததில், அவர் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கேரள காவல்துறை கர்நாடக காவல்துறையின் உதவியை நாடியது. அப்போதுதான், தர்ஷிதா கர்நாடகாவின் சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தர்ஷிதாவும், கர்நாடகாவின் பெரியப்பட்டணத்தைச் சேர்ந்த சித்தராஜுவும் நீ...