Posts

Showing posts with the label farmer death

விபத்தில் பறிபோன உயிர்? கதறி கதறி அழுத மாமனார்! இறுதியில், யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

Image
வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டா அடுத்த அகரம் சேரி, கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராகவன் (30) என்பவர், கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகவனின் மனைவி ஸ்வேதா (28), கேவிக்குப்பம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிவிலியர் (நர்ஸ்) பணியாற்றி வருகிறார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இருவருக்கும் குழந்தை இல்லை. வழக்கம்போல, வேலை முடிந்ததும் ஸ்வேதாவை பைக்கில் அழைத்து வர ராகவன் கொல்லமங்கலம் கிராமத்திலிருந்து புறப்பட்டிருந்தார். ஆனால், வெகு நேரமாகியும் ராகவன் வராததால் சந்தேகமடைந்த ஸ்வேதா, அவரது செல்போனுக்கு பலமுறை அழைத்துள்ளார். அழைப்பை ஏற்காத நிலையில், சிறிது நேரத்தில் ராகவனின் போனில் வேறொரு நபர் பேசியுள்ளார்.  அவர், சாலையில் சென்றுகொண்டிருந்தபோது போன் ஒலித்ததாகவும், எடுத்து பேசியதாகவும் கூறியுள்ளார். ஸ்வேதா தனது கணவரைப் பற்றி விளக்கியதும், அந்த நபர் சாலையோரம் தேடியபோது ஒருவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, அங்கு சென்று பார்த்தபோது, கேவிக்குப்பம்...