மேடையில் நடிகை டான்ஸை பார்த்து கையில் அசிங்கம் செய்த நடிகர்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை
மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் "அட்ஜஸ்ட்மென்ட்" எனும் பழக்கம் குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.சாந்தி வில்லியம்ஸ் கூறுகையில், "நான் 15-16 வயதாக இருக்கும்போதே மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன். இதனால், மலையாள சினிமாவை விட்டு விலகி தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கினேன். தமிழில் எனக்கு இதுபோன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை," என்றார். மேலும், மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, பதில் சொல்ல வேண்டிய அச்சத்தில் தலைவர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ததாகவும், இது ஒரு தவறான செயல் என்றும் அவர் விமர்சித்தார். "ராஜினாமா செய்துவிட்டு பிரச்சனையை மறைமுகமாக தீர்த்த பிறகு மீண்டும் பதவி ஏற்பார்கள். இதையும் விவரம் அறியாத ரசிகர்கள் கொண்டாடுவார்கள். தலைவர்களாக இருந்தால் பதில் சொல்ல வேண்டும், ஏன் முடியவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய ஒரு ப...