“கோழி பிடிக்கணும்.. கதவை தொறங்க அக்கா..” வீட்டில் குழந்தையுடன் தனிமையில் இருந்த பெண்.. பக்கத்துவீட்டு இளைஞர் வெறிச்செயல்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புளியஞ்சோலை கிராமத்தில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் சகுபர் நிஷா, அரை பவுன் நகைக்காக கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கு அண்டை வீட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முகமது அபு உஸ்மான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைக்கப்படவுள்ளார். சம்பவத்தின் பின்னணி சகுபர் நிஷாவுக்கும் அவரது கணவர் பைசூர் ரகுமானுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆகியிருந்தது. பிரசவத்துக்காக இலுப்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த சகுபர் நிஷா, குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை முடித்த பிறகு, மூன்று நாட்களுக்கு முன்புதான் கணவர் வீட்டுக்குத் திரும்பியிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு, வீட்டில் தனியாக இருந்த சகுபர் நிஷா மர்மமான முறையில் கத்தியால் விலாவில் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அக்கம் பக...