திருமணம் செய்தது அக்கா.. ஆனா, கர்ப்பமானது தங்கச்சி.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் பிரதீப் குமார். வயது 28. சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறிய வியாபாரம் செய்து வந்தவன். அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது அதே மாநிலத்தைச் சேர்ந்த சுஜாதாவுடன். சுஜாதாவுக்கு இரண்டு வயது இளைய தங்கை மனிஷா. திருமணம் முடிந்ததும் பிரதீப்-சுஜாதா தம்பதிகள் ஒரு சிறிய நகரத்தில் குடியேறினர். அதே நகரில் மருத்துவக் கல்லூரி இருந்தது. மனிஷா அங்கு செவிலியர் படிப்பு படிக்க சேர்ந்தாள். தினமும் சொந்த ஊருக்குச் சென்று வர முடியாததால், அக்காவின் வீடு அருகிலேயே இருந்ததால், குடும்பத்தினர் முடிவு செய்தனர். “ஹாஸ்டல் தேவையில்லை. அக்கா வீட்டிலேயே தங்கி படித்துக்கொள்.” முதல் சில மாதங்கள் சாதாரணமாகவே போனது. ஆனால் படிப்படியாக மனிஷாவுக்கும் பிரதீப்புக்கும் இடையே நெருக்கம் அதிகமாகத் தொடங்கியது. சுஜாதா வேலைக்குச் செல்லும் நேரங்களில் வீட்டில் இருவரும் தனியாக இருந்தனர். அந்த தனிமை, பேச்சு, உதவி என ஒவ்வொன்றும் அவர்களை நெருக்கமாக இழுத்தன. சில மாதங்கள் கழித்து மனிஷாவின் உடல்நிலை மாறத் தொடங்கியது. முதலில் சந்தேகம். பின்னர் உறுதி. அவள் கர்ப்பமாக இருந்தாள். அதிர்ச்சி அலையாக வீட்டையும், ஊரையும்...