Posts

Showing posts with the label Agra suitcase

நிஷா பிரியாணி செஞ்ச வீடு இது தான்! இரண்டு மார்**ளையும் அறுத்து! கொடூரம்! இதுவரை வெளிவராத காட்சிகள்!

Image
சென்னை அருகே குடுவாஞ்சேரியில் வசித்து வந்த 38 வயது பெண் ஹயாத்துன் நிஷா தொடர்பான வழக்கு, கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பொதுப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸிலிருந்து தொடங்கிய இந்த விசாரணை, சென்னை புறநகர் ரயில்கள், பார்க் நிலையம், குடுவாஞ்சேரி மசூதி தெரு வீடு வழியாக மணிப்பூர் வரை நீண்டது. இறுதியில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இன்னும் சில கேள்விகள் விசாரணையில் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஆக்ராவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்ததும், ஒரு பெட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வருவதாக பயணிகள் புகார் செய்தனர். ரயில்வே போலீசார் அந்த சிவப்பு சூட்கேஸை திறந்து பார்த்தபோது, பெண்ணொருவரின் உடல் பாகங்கள் இருந்தன. உள்ளே சரவணா ஸ்டோர் தொடர்பான பொருளும் கிடைத்ததால், வழக்கு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டதால், சென்னை ரயில்வே போலீசாரும் தாம்பரம் ஆணையத்து போலீசாரும் இணைந்து விசாரணை தொடங்கினர். சிசிடிவி பதிவுகளை ஒவ்வொன்றாகப் பார்த்தபோது, அந்த சூட்கேஸை சுமந்து சென்ற இருவர் தெ...