Posts

Showing posts with the label Diwali revelation

மனைவியை கொன்று தீபாவளி கொண்டாடிய கணவன்.. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் கொடூர சம்பவம்...

Image
கும்மிடிபூண்டி, அக்டோபர் 22: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான சிலம்பரசன் (35), தனது மனைவி பிரியாவை (30) இரண்டு மாதங்களுக்கு முன்பு கொலை செய்து, உடலை பிளாஸ்டிக் டிரமில் அடைத்து மறைத்து வைத்திருந்ததுடன், பின்னர் ஏழுக்கண்பாளம் அருகே குழி தோண்டி புதைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபாவளி அன்று பிரியாவின் சகோதரர் வீட்டுக்கு வந்த போது, போதையில் ஆவேசமடைந்த சிலம்பரசனின் உளறலால் கொலை விவகாரம் அம்பலமானது. சிலம்பரசன் சிறப்பு மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கும்மிடிபூண்டி போலீஸ் நிலையத்தின்படி, சிலம்பரசனுக்கும் பிரியாவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான நாள் முதல் பிரியாவின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்ட சிலம்பரசன், அடிக்கடி அடித்து உதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குக்கர் மூடியால் தாக்கி காயப்படுத்தியதால் கோபமடைந்த பிரியா தன் தாய்வீட்டுக்கு சென்றார். காயங்கள் ஆறிய பின் சமாதானப்படுத்தி சிலம்பரசன் திரும்ப அழைத்துவந்தார்.ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிரியா வேறொருவருடன் செல்போ...