மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படம் மதராஸி.. முருகதாஸை சீண்டிய சல்மான் கான்.. என்ன நடந்தது..?
மும்பை: பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'சிக்கந்தர்' படம் பெக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியைத் தழுவியது. இயக்குநர் முருகதாஸ் அளித்த பேட்டியில், நடிகர் சல்மான் கானின் லேட் அரைவல் ஷூட்டிங் டைமிங்கே படத்தின் தரத்தை பாதித்ததாகக் கூறினார். "பகல் காட்சிகளை இரவில் இடம்பெயர்த்து படமாக்க வேண்டியிருந்தது. சல்மான் இரவு 8 மணிக்கு மட்டுமே செட்-க்கு வருவார்" என்று அவர் விமர்சித்தார். மேலும், குழந்தை நட்சத்திரங்களின் சோர்வு, உணர்ச்சிக் காட்சிகளின் தோல்வி ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினார். இதற்கு சமாதானமாக, 'பிக் பாஸ் 19' நிகழ்ச்சியின் ஹோஸ்ட் சல்மான் கான் பதிலடி கொடுத்தார். "சமீப படங்களில் எதுவுமே என்னை வருத்தப்பட வைக்கவில்லை. 'சிக்கந்தர்'யும் அப்படித்தான். கதை சிறப்பாக இருந்தது. நான் இரவு 9 மணிக்கு வருவேன் என்று இயக்குநர் சொன்னார், ஆனால் அப்போது என் விலா எலும்பு உடைந்திருந்தது" என்று விளக்கினார். ஆரம்பத்தில் சஜித் நதியவாழா இயக்கிய படமாக இருந்த 'சிக்கந்தர்', பின்னர் முருகதாஸ் கையில் வந்தது. சஜித் விட்டு விலகியதும், முருகதாஸ் 'மதராசி' என்ற படத்தை இ...