Shimjitha-வின் கணவர் பாவம்! சகோதரரின் புகார்! தீபக்கின் நண்பர் கொடுத்த பகீர் தகவல்!
கேரளாவில், அமைதியான ஒரு சாசாரண நாள். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தீபக் என்ற 42 வயது ஆண், அன்று வேலைக்குச் செல்லும் வழக்கமான பயணத்தைத் தொடங்கினார். அவருக்கு பின்னால், ஷிம்ஜிதா முஸ்தபா என்ற 35 வயது பெண் ஏறினார். பேருந்து நிரம்பியிருந்தது. மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருந்தனர். அது ஒரு சாதாரண கூட்டம். ஆனால், ஷிம்ஜிதா தனது செல்போனை எடுத்தார். அவர் தீபக்கைப் பார்த்து, "இவர் என்னை தொட்டார்" என்று கூறி வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அவர் எடிட் செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அது வைரலானது. லட்சக்கணக்கான பார்வைகள். கோபம், வசைபாட்டல், அவமானம்... எல்லாம் தீபக்கின் மீது பொழிந்தது. தீபக் அந்த வீடியோவை முதலில் பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தார். அவரது நெருங்கிய நண்பர் அஸ்கர் அலி தான் முதலில் அவரிடம் காட்டினார். "மச்சி, உன் முகம் இப்படி ஒரு வீடியோல வந்திருக்கு. பொண்ணு ஏதோ பதிவிட்டிருக்காங்க" என்று சொன்னார். தீபக் ஷாக்கில் உறைந்தார். "நான் எதுவும் பண்ணலையே... பஸ்ல போயிட்டு வந்துட்டேன். ஞாபகமே இல்ல" என்று மனம் உடைந்தார். அவரது மனம் உடைந்தது. சமூக வலைதளத்தில...