இதனால் தான் முதல் காதலனை ப்ரேக்-அப் செய்தேன்! நடிகை சுவாசிகா பேச்சு! பொளந்து கட்டும் ரசிகர்கள்!
தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் பிரபலமான நடிகை சுவாசிகா (பூஜா விஜய்), தனது முதல் காதல் அனுபவத்தைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். "நூறு சாமி" உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பகுதியை ரகசியமின்றி வெளியிட்டார். இந்த வெளிப்பாடு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவாசிகா கூறியதாவது: "எனக்கு முதலில் ஒரு காதல் இருந்தது. அவரை நான் எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை. அவர் ரொம்ப அழகானவர். என்னை நல்லபடியாக மதித்தார். எங்களுக்குள் இருந்த உறவும் தவறானது இல்லை. ஆனால் அவருடைய குடும்பத்தில் திடீரென்று பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. பிறகு காதல் வாழ்க்கையா? குடும்ப வாழ்க்கையா? என்ற குழப்பத்தில் தான் எங்களுக்கு பிரேக் அப் ஆச்சு. இதை ரகசியமாக வைக்க எனக்கு அவசியம் இல்லை." இந்தக் கூற்று பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சமூக ஊடக ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சிலர், "காதலனிடம் பணம் இல்லை எனத் தெரிந்ததும் கழட்டி விட்டுட்டீங்க. அப்படி என்றால் நீங்கள் அவரை உண்ம...